ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிள்ளையார் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாழன் காலை 8.30 மணி முதல் மஹா கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீஸித்தி விநாயகருக்கு கட அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
