நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலையத்தில் அமைந்துள்ள சீதா லஷ்மண ஹனுமத் ஸமேத ஸ்ரீகோதண்ட ராமருக்கு கடந்த 1-9-2022 முதல் 4-9-2022 வரை பவித்ர உற்சவம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

சிறப்பு ஹோமங்கள், மூலவர்க்கு பவித்திர மாலைகள் சாற்றி சேவை செய்யப்பட்டது. பக்த கோடிகள், வேத கோஷ்டிகள், பிரபந்த கோஷ்டிகள், கோதா கோஷ்டிகள், உபய தாரர்கள், விஜய்நகர் சமாஜ், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள், கைங்கர்யம் கோஷ்டியினர்,சமையல் கலைஞர்கள் அலங்காரம் செய்யும் மகா நிபுணர் குழு இவர்களின் பெரிய பங்களிப்பு காரணத்தாலும் இறைவன்அருளாலும் வெகு சிறப்பாக நடந்தேறியது.இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பவித்ர உற்சவம் என்றால் உற்சவங்களிலேயே சிறப்பானது, புனிதமானது. இந்த உற்சவம் சிவன், பெருமாள் ஆலயங்களிலும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடைபெறும். ஆலயங்களின் தன்மை, திருப்பணி செய்வோரின் சக்தியைப் பொருத்து 3 நாட்கள், 5 நாட்கள், 9 நாட்கள் என்று நடத்தப்படும். மிகப் பெரிய ஆலயங்களில் விரிவாக நடைபெறும்.