நமது வேளச்சேரி விஜயநகரில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் இவ்வருட ஸ்ரீராம நவமி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவத்தின் தொடக்க நாளான 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விஷ்வக்சேன ஆராதனம், மற்றும் பூமி பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பூமி பூஜையில் சிவா விஷ்ணு கோவில் செயளாலர் திரு. பட்டாபிராமன் அவர்கள் மற்றும் அவருடைய மனைவியும் கலந்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து பெருமாள் திருச்சிவிகை, சூர்ய பிரபை, கருட சேவை, சேஷ வாகனம், அனுமந்த வாகனம் இவற்றில் பெருமாள் சேவை புரிந்தார். மேலும் உற்சவத்தில் யானைவாகனம், சந்திர பிரபை, குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கு இவற்றிலும் சேவை புரிந்தார்.

இதனை தொடர்ந்து 4ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கருட சேவையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீ ராம நவமி நாளான அன்று காலை 81 கலச திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. மாலை பட்டாபிஷேகம் மற்றும் கனகாபிஷேகம் நடைபெறும். மறுநாள் அன்று உற்சவ நிறைவாக புஷ்பயாகம் நடைபெற இருக்கிறது. 12ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பெருமாள் திக்விஜய புறப்பாடு கண்டு அருள்புரிவார்.