சிவா விஷ்ணு ஆலயத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…

0
143

முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞான வேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய் அன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.

தேவர்களின் படைத்தளபதியாக பொறுப்பேற்று, தேவர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம்.
இதையடுத்து நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் 18ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. வள்ளி முருகர் கல்யாண உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.