சிறுவாபுரி பதிகம்

0
170

மானோடு நீகூடி மரகத மயிலோடு
மன்னனே விளைவாகினாய்
மதியோடு வளம் கூட்டி மன்றத்தில் நிலையான
மகிமைக்கு அருளாகினாய்.
வானோரின் புகழ்பாடி வையத்தில் வாழ்வோரி
வாழக்கைக்குத் துணையாகினாய்
தேனேன்ன தெளிவென்று தெரியாத பேருக்கும்
தெளிவாக்கி நீ காட்டினாய்
ஊனுக்குப் பக்கத்தில் உறவென்ன பெரிதென்ற
உண்மைக்கு ஒளியாகினாய்
யாருக்கும் புரியாத எவருக்கும் தெரியாத
அறிவுக்கு அறிவாகினாய்
அதமோடு ஆசைகள் அடக்கியே எங்களை
அன்போது ஆட்சி செய்யும்
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவபால சுப்ரமணியே.
காசென்ன பெரிதென்று காலத்தில் வாழ்வோரும்
கவலையை மறக்கிறார்கள்
மாசற்ற மனதோடு மற்றவரைக் காண்போரும்
மனக்குறை தீர்க்கிறார்கள்
சூழ்வோரும் நலம் பெற சுற்றத்தார் வளம்பெற
சுகத்தையே காண்கிறார்கள்
அமிழ்துவறும் வார்த்தையில் அடக்கமுட னிப்போரும்

அன்பாக வாழ்கிறார்கள்
நாசமுடன் பேசாமல் நல்லதையே செய்வோர்
நற்சுகம் பெறுகிறார்கள்
வாசமலர் போலுதவி பிறருக்கும் வாழ்வோரும்
பாசமுடன் வாழ்கிறார்கள்.
கல்லான இதயமுடன் காலத்தில் வாழ்வோரை
கரைக்கின்ற தெய்வம் நீயே
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவபாலசுப்ரமணியே
ஆழகு திருமேனியில் அபிஷேக பால்குடம்
ஆனந்த தரிசனம் காண்
கற்பூர தீபமும் கண்கவரும் தோற்றமும்
காட்சியாய் காணும்போது
மலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்
புகழாட்சி காணுகின்றேன்.
மலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்
புகழாட்சி காணுகின்றேன்.கேட்டவரம் கேட்டபடி கொடுக்கின்ற தெய்வமே
கேட்டவரம் கேட்டபடி கொடுக்கின்ற தெய்வமே
கேள்விகள் என்னவென்று
கேட்கின்ற பேருக்கு கேள்விக்குப் பதில் சொல்ல
வேண்டுவரம் ஈண்டளித்தாய்

பொன்னான மேனியில் பூச்சூடி காண்போர்க்கு
புதுமனை நீ கொடுத்தாய்
மணமகள் வேண்டிவரும் மனதினை நீயறிந்து
மணமகளாக்கி வைத்தாய்
சோலை திருக் குடிக்கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவ பால சுப்பிரமணியே
நேற்றாகி இன்றாகி நாளையென அறியாது
நாளையே கடத்துகின்றோம்
ஒன்றாகி உருவாகும் கருவாகிப் போனாலும்
ஆண்டுக்குள்தான் அறிகிறோம்
நன்றாகி நலமாகி வளமோடு யிருந்தாலும்
சிவலோகம் சேர்வதறியோம்
கன்றாகிப் போனபின் கனியாத தாயானால்
காலத்தில் என்ன செய்வோம்
என்றாகின்ற இல்வாழ்க்கை நன்றாக வேண்டுமென
இறையோடுதான் கூடுவோம்

அன்றாட வாழ்வினில் அவுதியுறும் போதெல்லாம்
ஆண்டவன் உனைத்தெடுவோம்
மன்றாடி மன்றாடி மதிகெட்டுப் போனவரும்
மன்னன் உனைத்தான் கூறுவார்
சோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்
சிவ பால சுப்பிரமணியே.
எண்ணத்தில் உள்ளதை யென்னென்ன என்றுமேஎண்ணியே கூறிவைத்தாய்
ஏழையின் இதயத்தை ஈசையுடன் நீ தந்து
இயலாமை ஆக்கிவைத்தாய்
வண்ணத்தில் விழிபார்க்க வான்கூட்டு வாகைபெற
வளமொடு ஆக்கிவைத்தாய்
சொல்லுக்கு சுவை கூட்டின் சொல்லோ அமுதாக
சொல்லிலே நடை பழகினாய்
அன்புக்கு அசை போடும் ஆசையை பிறப்பாக்கி
கண்ணீரை கதையாக்கினாய்அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பேர் சொல்ல
கந்தனே கருவாக்கினாய்

மன்றத்தில் விளையாடு மடிமீதில் தவழ்ந்தாடும்
மன்னனே மயிலேறுவாய்
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவ பால சுப்பிரமணியே.
நெற்றியில் திருநீறு அணிந்திட அனுதினம்
நிம்மதி சேர வைத்தாய்
நெஞ்சத்திலே வைத்து தஞ்சமென கொள்வோரை
நீடுழி வாழவைத்தாய்
முற்றவர்போல் வாழ்ந்து நடைபோட்டு உனைக்கான
முடவரும் நடைபழகினாய்

உற்ற தமிழ் உளதென்று உன் நாம் கூறிவர
ஊமையுடன் மொழி பயின்றாய்
ஒளி வீசும் உன் முகம் காணாத குருடனை
விழி தந்து வழிகாட்டினாய்
உளச்சோர்வு உற்றவுடன் உடற்சோர்வு தானாகி
உனைக்கான வழிகாட்டினாய்
காணுவதில் சுகமாகி கற்பனையில் வளமாகி
அழகுத் திருச்சிலையானாய்
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவ பாலசுப்பிரமணியே!
ஐந்திலே எத்தனை அறியாத பருவத்தில்
ஆளாக்கி தாலாட்டினாய்

பூவான எந்தனை காயாகிப் பார்க்காமல்
கனியாகி மாற்றிவைத்தாய்
ஆகாயம் போலுயர அயராதுழைத்தாலும்
அளிக்கின்ற எடையாகினாய்
சூழ்ச்சிகள் புரியாது சூழ்வது தெரியாது
சுற்றத்தை மாற்றிவைப்பாய்
சொந்தங்கள் இதுவெனச் சொல்லி வைப்போர்க்கு
சொந்தமோ நீயாகினாய்

புறந்தவன் இறப்பதில் பேதமை இல்லாத
பெரும்பணி உனதாக்கினாய்
அரும்பணி உருவாக்கி அடிமையாய் எமையாக்கி
அன்றாடம் தேடவைக்கும்
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்
சிவ பாலசுப்பிரமணியே.
மனைவீடு இருகொண்டு மன்றத்தில் வாழ்ந்துவரும்
மன்னனே நீ வாழ்கவே
மனம்போன போக்கில் குடிகொள்ளும் அருள்கூடம்
ஒளி வீசும் நலமாகவே
அணிகலன் நீயூட்ட படைகலம் கொண்ட உன்
கைவேலும் சிறந்தோங்கவே
ஆகாயம் மேலுயர்ந்து அதிரூப சக்திதரும்
மனம்போல் மயில்வாழ்கவே

சேவலொரு பணியாக நாகமொரு இடமாக
நாளெல்லாம் வளம் கூட்டவே
எருக்கோடு பூஜைமலர் என்றைக்கும் நீசூட
நந்தவனம் செழித்தோங்கவே
கந்தனருள் கவிபாடி உனை நாடி வருவோரும்
ஒருகோடி நலமாகவே
சோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்
சிவபால சுப்பிரமணியே.