Monday, December 23, 2024

சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க விநாயகர் வழிபாடு…

சனிபகவானை     கண்டு பயப்படாதவர்கள் யாருமே இல்லை. சனி பகவானின் பிடியில் சிக்கிக் கொண்டு, வாழ்க்கையில் தீராத துன்பத்தில் சிக்கித் தவிக்கும் சமயத்தில், பிரச்சனையை சரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவோம். நிறைய பணம் செலவு செய்து பல கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் சென்று பரிகாரம் செய்வோம்.

ஆனால் நம் வீட்டு பக்கத்தில் இருக்கும், தெரு முனையில் இருக்கும், பிள்ளையாரை கும்பிட மறந்து இருப்போம். உங்களுக்கு வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி, சனி  பகவானால்  வாழ்க்கையில் இன்னல்கள்    வரக்கூடிய  சூழ்நிலை இருந்தாலும் சரி, முதலில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு விநாயகர் வழிபாடு.

நமக்கு எப்போது சிக்கல் வரும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். மனசு சொல்லும் இதை செய்தால் நமக்கு பிரச்சனை வரும். இதை செய்யாதே செய்யாதே என்று. ஆனால் மூளை சொல்லும் இதை செய்துதான் பார்ப்போமே. அப்படி என்னதான் நடக்கிறது என்று ஒரு கை பார்த்து  என்று. சவாலோடு தேவையில்லாத ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி மூளை, அதாவது புத்தி சொல்லும். 

    உங்களுடைய   புத்தியை  தடுமாறச் செய்யக்கூடிய அந்த சமயத்தில், பிள்ளையார் வந்து உங்களை காப்பாற்றி விடுவார். அதற்காகத்தான் விநாயகரை வழிபாடு செய்ய சொல்கின்றோம். ஏனென்றால் புத்தி காரகன் விநாயகர். உங்கள் புத்தியை தடுமாற விடாமல் பார்த்துக் கொள்வார். கடைசி நேரத்தில் இதை செய்தால், நமக்கு பிரச்சனை வரும். இந்த செயலை செய்ய வேண்டாம் என்று அந்த காரியத்தை செய்யவிடாமல்  தடுக்கக்கூடிய   சக்தி இவருக்கு உண்டு.

என்னங்க காரியத்தடை வரக்கூடாது என்பதற்காகத்தான்     பிள்ளையாரை கும்பிடுகின்றோம். ஆனால் இதில் எல்லாமே தலைகீழாக   இருக்கிறதே   என்று யோசிக்காதீங்க. தவறான காரியத்தை தடை செய்து, உங்களுக்கு தேவையான காரியங்களை நடத்தி தரக்கூடிய வேலையை பிள்ளையார் பார்த்துபார். 

விநாயகருக்கு பிடித்த பிரசாதம்
சரி, தீராத இன்னல்களில் இருந்து விடுபட, ஆரோக்கியமாக வாழ, சனி பகவான் கொடுக்கும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க, விநாயகருக்கு என்ன நெய்வேதியும் வைக்கணும். கொழுக்கட்டை தாங்க. ஆனா இதில் ஸ்பெஷலா ஒரு கொழுக்கட்டை இருக்குது. அதுதான் எள்ளு கொழுக்கட்டை. நிறைய பேர் வீடுகளில் விநாயகருக்கு எள்ளு கொழுக்கட்டை செய்து நிவேதனம் வைக்கும் வழக்கம் இருக்கும்.

இதற்கு காரணம் என்ன. எள்ளு சனி பகவானுக்கு உரிய பொருள். இதை வைத்து விநாயகருக்கு   கொழுக்கட்டை செய்து வைக்கும் போது சனிபகவான் மனம் குளிர்ந்து நமக்கு ஆசிகளை வழங்குவார். விநாயகப் பெருமான் சனிபகவானிடம் இருந்து நம்மை காக்கும்  வேலையை செய்து விடுவார். ரோம்பவும்       துன்பத்தில் கஷ்டப்படுபவர்கள்   வாரம்  ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை விநாயகர் கோவிலுக்கு, எள்ளு பூரணம் வைத்த கொழுக்கட்டையை செய்து கொண்டு போய் நிவேதனம் வைத்து அங்க கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுங்கள்.    
சங்கடஹர    சதுர்த்திக்கும்   இந்த பிரசாதத்தை விநாயகர் கோவிலுக்கு செய்து கொடுக்கலாம்.   கோவிலுக்கு  செல்ல முடியவில்லை   என்பவர்கள்    இந்த கொழுக்கட்டையை  வீட்டிலேயே   செய்து விநாயகருக்கு படைத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும்  சாப்பிடலாம்.   இல்லை, கொழுக்கட்டை உங்களால் செய்ய முடியாதா. எள்ளு உருண்டை செய்து விநாயகருக்கு நிவேதியம் வையுங்கள்.

எள்ளுருண்டையும்    செய்யவும் தெரியாதா. கடையிலிருந்து ஒரு பாக்கெட் வாங்கி நிவேதனம் செய்து அதை எல்லோரும் சாப்பிடுங்கள். இது ஒரு எளிமையான வழிபாடு தான் ஆனால் பெரிய அளவில் பலன் தரக்கூடிய வழிபாடு. புத்தி தடுமாறக்கூடாது, கெட்ட நேரத்திலும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றால் விநாயகர் பாதங்களை பிடிப்பதுதான் ஒரே வழி என்று  இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest article