Monday, December 23, 2024

சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருக ஐப்பசி மாதம் முழுவதும் தினமும் காலையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்…

ஐப்பசி மாதத்தை ஆன்மீகத்தில் குபேர மாதம் என்றும் சொல்லுவார்கள். ஐப்பசி மாதம் தீபாவளி வரவிருக்கின்றது. இந்த ஐப்பசி மாதத்தில் தான் லட்சுமி குபேர பூஜை செய்யக்கூடிய நாளும் இருக்கின்றது. 

இந்த ஐப்பசி மாதம் முழுவதும் காலையில் எழுந்து இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்து பச்சை நிற குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். குபேர சம்பத்து கிடைக்கும். பலதரப்பட்ட பண பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஒரு மாதத்தை யாரும் தவற விடாதீங்க. 

ஐப்பசி மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்

ஓரு நாள் தவற விட்டு விட்டோம். பரவாயில்லை, தவறு கிடையாது இன்று இந்த பதிவை படித்த பிறகு இந்த மாலை பூஜையறையில் விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால், நாளை காலை எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த வழிபாட்டை செய்ய தொடங்கி விடுங்கள்.   குளித்தவுடன்  பூஜை  அறைக்கு வந்து  விளக்கேற்றி   வைத்துவிட்டு, மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டி வாசனை நிறைந்த ஊதுவத்தி ஏற்றி வையுங்கள். பிறகு உங்களுடைய   வீட்டில்   குபேரர் திருவுருவப்படம் அல்லது பொம்மை இருந்தால் அதற்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விடுங்கள். 

ஒரு ரூபாய் நாணயத்தை அதில் போட்டு விடுங்கள். தினம் தினம் காலையில் எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்பு ஒரு ரூபாய் நாணயத்தை அந்த கிண்ணத்தில் போட்டுவிட்டு மனதார உங்கள் பண பிரச்சினை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ‘ஓம் ஸ்ரீம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 

கணக்கு என்பது உங்களுடைய விருப்பம்தான். 108 முறை உச்சரித்தால் ரொம்ப   ரொம்ப  நல்லது.  நீங்கள் மந்திரத்தை   உச்சரிக்கும்   போது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ரூபாய் நாணயத்தை      கிண்ணத்தில் சேகரிக்கிறீர்கள் அல்லவா. அதை ஐப்பசி மாதம் முடிந்ததும் அந்த காசுக்கு சாப்பாடு வாங்கி அன்னதானம் செய்து நல்லதுங்க. 

28 நாட்கள் அல்லது 29 நாட்கள் மந்திரத்தை உச்சரித்தால் 29 ரூபாய் அப்படித்தான் அதில் சேர்ந்திருக்கும். கூடுதலாக கொஞ்சம் பணம் போட்டு அந்த காசுக்கு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம் தவறு கிடையாது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்த மந்திரத்தை உச்சரித்து பச்சை நிற குங்குமத்தை நெற்றியில் இட்டு வர குபேரரின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு நிறைவாக கிடைக்கும். 

வீட்டில்  ஐஸ்வர்ய  கடாட்சம் பெருகும்.  புணக்கஷ்டம்  படிப்படியாக குறையும் என்பது நம்பிக்கை. மிக மிக எளிமையான பரிகாரம்தான். என்னால் விளக்கு ஏற்ற முடியாது, ஊதுபத்தி ஏற்ற முடியாது, ஒரு ரூபாய் நாணயத்தை கூட கிண்ணத்தில் போட முடியாது நேரமே இல்லை என்பவர்கள் காலை குளித்து முடித்து வந்து பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்தை பார்த்து ‘ஓம் குபேராய நமஹ’   என்று  மூன்று  முறை சொல்லிவிட்டு தினசரி வேலையை தொடங்குங்கள்.

Latest article