குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், வீட்டில் தாராளமாக செல்வ வளம் பெருகவும் லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு…

0
297
செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என நாம் நினைப்பதெல்லாம் சரி தான். ஆனால் அந்த செல்வத்தை சேர்க்க வேண்டும் எனில் அதற்கான ஞானத்தை பெற வேண்டும். அந்த ஞானம் நாம் மட்டும் பெறாமல் நம் குழந்தைகளும் பெற்று கல்வியில் சிறந்து விளங்கி வீட்டிலும் செல்வ வளங்கள் பெருகி இருந்தால் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படி  ஒரு  செல்வ  வளத்தையும் ஞானத்தையும் அளிக்கக் கூடிய லட்சுமி ஹயகீரவரை எப்படி வழிபாடு செய்வது பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கல்வி    செல்வம்  செல்வ  வளம் இரண்டும் ஒரு சேர பெற லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாடு முதலில் ஹயக்ரீவர் பற்றி தெரிந்து கொள்வோம். முன் காலத்தில் மதுர் கைடவர் என்ற இரு அரக்கர்கள் உலகத்தை ஆள வேண்டும்   என்ற  எண்ணத்துடன் வாழ்ந்தார்கள்.     உலகை   ஆள வேண்டுமெனில் படைக்கும் கடவுளாக மாற வேண்டும் என முடிவு செய்தார்கள். படைக்கும் கடவுளான பிரம்மா வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தான் படைக்கும் தொழிலை செய்தார். அந்த வேதத்தை நாம் கொண்டு  சென்று  விட்டால் படைப்பு தொழிலை நாமே செய்து உலகை ஆளலாம் என்ற எண்ணத்தில் எடுத்து கடலுக்குள் சென்று விட்டனர்.    இதனால்   பிரம்மா   விஷ்ணு பெருமானிடம் முறையிட அவர் அரக்கர்கள் எப்படி மனித உடலும், குதிரை முகமாகவும் இருந்தார்களோ, அதே போல தானும் உருமாறி கடலுக்கு அடியில் சென்று அவர்களை வதம் செய்து வேத புத்தகத்தை கொண்டு வந்து பிரம்மாவிடம் கொடுத்தாக சொல்லப்படுகிறது. வேத புத்தகத்தையே காப்பாற்றி தந்தமையால் இவரை வணங்கும் போது கல்வியும் குழந்தைகள் சிறந்து விளங்க என்பதால் தான் கல்விக்கான தெய்வமாக இவரை வழிபாடு செய்கிறோம்.

அது மட்டும் இன்றி கல்வி கடவுளான சரஸ்வதி   தாயாரை  தன்னுடைய சந்தேகங்களை தீர்த்ததற்காக இவரை தான் அணுகுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஹயகீரவரை கல்விக்காக மட்டும் வணங்காமல் அத்துடன் சேர்த்து நம்முடைய குடும்ப நலனுக்காக வணங்குவதாக இருந்தால் லட்சுமி ஹயக்ரீவராக வணங்க வேண்டும். அந்த வழிபாடு பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து.

இந்த வழிபாட்டிற்கு லஷ்மி ஹயக்ரீவர் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இந்த படம் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பெருமாளின் படத்தையே வைத்து வணங்கலாம். ஏனெனில் அவரின் அவதாரம் தான் இவர். இவருக்கு ஏலக்காய் மாலை சாற்ற வேண்டுயது மிக மிக முக்கியமானது. அதன் பிறகு தீபம் ஏற்றி வைத்து பசும்பாலை காய்ச்சி அதில் ஏலக்காய் போட்டு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும் இது தான் மிகவும்.

அதன்  பிறகு  நீங்களும் உங்கள் குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே துளசி இலைகளை கையில் கொண்டு அவருக்கு கீழே உள்ள இந்த மந்திரத்தை ஜெபித்தபடி துளசி அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஹயக்ரீவ மூல மந்திரம்:

உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய! போதய

இந்த வழிபாடு முடிந்த பிறகு  படைத்த   நெய்வேத்திய  பாலை குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்களும் அருந்தலாம். இவ்வளவு தான் இந்த வழிபாடு.

இதைத் தொடர்ந்து செய்து வரும் போது குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவதோடு வீட்டிலும் லட்சுமி கடாட்சம் தேதிக்கு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.