சென்னை குரு நானக் கல்லூரியில் இயங்கும் முதுகலை சமூகப் பணி துறையும் சமூகப் பணி பேரவை – சமூகப் புதுமையும் இணைந்து 15.11.2021 அன்று திருவள்ளுவர் மாவட்டம், ஏரிக் கரை கிராமத்தில் உள்ள மேல் மணம்பேடு பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய குடும்பங்கள் 150 மக்களுடன் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய குடும்பங்களுக்கு தார்பாய் விரிப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு வெள்ள நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இச்சமுதாய மக்களுக்கு உதவி புரிவதற்கு குரு நானக் கல்வி சமூகம் (Educational Society) தாளாளர் மற்றும் செயலர் திரு. மஞ்சித் சிங் நய்யார், கல்லூரி முதல்வர் மா.கு. இரகுநாதன் கருத்துரைகள் மற்றும் அனுமதி வழங்கினார்கள். மேலும் இச்சமுதாய மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை குரு நானக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கினர்.
