Sunday, December 29, 2024

குரு நானக் கல்லூரியில் பொங்கல் மேளா திருவிழா…

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் ஜனவரி 2023, 12 மற்றும் 13 தேதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் இயங்கும் GNCIIES & WDC இணைந்து பொங்கல் மேளா திருவிழாவை நடத்தினர். இந்நிகழ்வில் பல்வேறு துறை மாணவர்களின் சுயதொழில் தொடங்கும் முனைவை வெளிப்படுத்தும் வகையில் 60 அங்காடிகள் உருவாக்கி பொருட்களை காட்சிப்படுத்தினர். இவுற்றில் பாரம்பரிய உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், கைவினைப் பொருட்கள், அறிவுசார் விளையாட்டுகள் முதலானவை மாணவர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய பண்பாட்டு கலாச்சாரத் திருவிழா நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Latest article