Monday, December 23, 2024

குடும்ப பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு…

குடும்பம் என்றாலே சந்தோஷம் இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தது தான். ஆனால் ஒரு சில குடும்பங்களில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகத் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது இதிலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை என்பது   அறவே    இருக்காது. எதற்கெடுத்தாலும்    வாக்குவாதங்களும் விவாதங்களும் தான் தொடரும். 

இப்படியான   குடும்பத்தில்  ஒரு நாளும் நிம்மதியாக வாழ முடியாது. இந்த சூழ்நிலையில் வளரக் கூடிய பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். ஒரு குடும்பத்திற்கு அடித்தளமானவர்களே கணவன்    மனைவி    தான். அவர்களுக்குள்ளேயே புரிதல் இல்லை என்றால் அந்த குடும்பத்தின் நிலை பற்றி சொல்லவே தேவை இல்லை.

இப்படியான   சிக்கல்களை  நீக்கக் கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.    

கணவன் மனைவி பிரச்சினைகள் தீர
இந்த வழிபாடு செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் செய்வது சிறப்பு இதற்கு இரண்டு பொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும். ஒன்று அத்திமர பலகை மற்றொன்று காமேஸ்வரன் காமேஸ்வரி படம் அல்லது சிலை.

இந்த காமேஸ்வரன் காமேஸ்வரி என்பது சிவபெருமான் பார்வதி தாயாரை தான் குறிக்கும். இவர்களின் இந்த படமோ அல்லது சிலையோ வாங்கி அத்திமர பலகை  மீது  வைக்க   வேண்டும். அவர்களுக்கு வாசனை மிக்க மலர்களை சூட்டுங்கள். மல்லி பாரிஜாதம் செண்பக மலர் இப்படியான மலர்களாக இருந்தால் நல்லது. 

அடுத்து நெய்வேதியமாக அவலும் வெல்லமும் கலந்து வைக்க வேண்டும். இதை அனைவருக்கும் தர வேண்டும். ஆகையால் சற்று அதிகமாக செய்து கொள்ளுங்கள். அதே போல் இன்னொரு சிறிய கிண்ணத்தில் பாலும் தேனும் கலந்து வையுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு ஏற்ற வேண்டிய தீபம் தான் மிகவும் முக்கியமானது. இதற்கு அகல் விளக்கு, குத்துவிளக்கு நீங்கள் வீட்டில் ஏற்றக் கூடிய எந்த விளக்காக இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் சுத்தமான பசும்பாலை கொஞ்சம் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

காமேஸ்வரன்      காமேஸ்வரி தாயாருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி நெய்வேத்தியங்களை வைத்து இப்படி வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். குறிப்பாக கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அன்யோன்யமாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இந்த   தீபத்தை  18  வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். அவல் வெல்லம் நெய்வேத்தியத்தை வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும். ஆனால் பாலும் தேனும் கலந்து வைத்த நெய்வேத்தியத்தை     குடும்பத்தில் உள்ளவர்கள் குடிக்க வேண்டும். ஒரு வேளை கணவன் மனைவி பிரிந்து இருந்து இந்த வேண்டுதலை வைத்தாலும் யாராவது ஒருவர் இதை செய்தால் கூட நல்ல பலனை பெற முடியும்.

குடும்ப ஒற்றுமைக்காக செய்யப்படும் இந்த வழிபாட்டு  முறையில்  நம்பிக்கை இருப்பவர்கள்  நம்பிக்கையுடன்  இந்த தெய்வங்களை வணங்கி வாருங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உள்ள சூழ்நிலை மாறி மகிழ்ச்சியாய் வாழும் சூழ்நிலை   உருவாகும்    என்று சொல்லப்படுகிறது.

Latest article