குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும், தடையில்லா பண வரவும் வர இதை செய்தாலே போதும்.

0
168
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்டுள்ளவராக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்து அனுசரித்து செல்ல வேண்டும். என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவை வெறும் கருத்துக்கள் தான் என்பதை உணர்ந்து மனதார ஒன்றி இருக்க வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். அந்த வகையில் இந்த 3 விஷயங்களை தினமும் செய்பவர்களுக்கு மனதளவில் மகிழ்ச்சியும், நிம்மதியும், குடும்பத்தில் தடை இல்லாத பண வரவும் ஏற்படும் என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான எளிய சாஸ்திர குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில்  காலையில்  ஆறு மணிக்கு எழுவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். ஆறு மணிக்கு மேல் எழுபவர்களுக்கு தரித்திரம் பிடிக்கும் என்று கூறுவார்கள். இவர்களிடம் சோம்பேறித்தனமும், சோர்வும் எப்பொழுதும் குடி கொள்ளும். இதனால் தோல்விகள், துன்பங்கள், குடும்பத்தில் நிம்மதியின்மை போன்றவையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால் தான் அந்த காலத்தில் எல்லாம் எல்லோருமே சீக்கிரம் என பழகிக் கொண்டனர்.  4:30 மணி முதல் 6.00 மணி வரை வீட்டை நோக்கி மகாலட்சுமி வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது எனவே அந்த நேரத்தில் எழுந்து முகம் எல்லாம் கழுவி வாசலை கூட்டி, பெருக்கி, மொழுகி, கோலம் போட்டு வைக்க வேண்டும். இப்படி கோலம் போடுபவர்கள் வெள்ளிக்கிழமையில் தாமரை கோலம் போடுவது சிறப்பு! வேள்ளிக்கிழமை தோறும் காலையில் 6:00 மணிக்கு எழுந்து, வாசல் தெளித்து, தாமரை கோலத்தை அழகாக இட்டு வைத்தால், வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி, செல்வம் அனைத்தும் பெருகும்.

இருண்டாவதாக    அன்னதானம்     என்பது நம்முடைய புண்ணியங்களை பெருக்கக் கூடிய ஒரு அற்புதமான விஷயமாக மனிதனுக்கு இறைவன் கொடையாக கொடுத்துள்ளான். நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் வயிறு நிரம்ப சாப்பிட்டு வறுமை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற பெருந்தன்மை நமக்குள் வளரவே தானங்கள் செய்கிறோம். இப்படியான தானத்தை நீங்கள் காலையில் உணவு உண்ணும் முன்பே எழுந்ததும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்தால் குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று மனிதர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். அப்படி முடியாமல் இருக்கும் பட்சத்தில் காலையில் எழுந்து நீங்கள் கோலம் போட்ட பிறகு சிறு குருவிகளுக்கும், பட்சிகளுக்கும் தானியங்களை தானம் செய்யுங்கள்.
அது மட்டும் அல்லாமல் விலகினங்களுக்கு உங்கள் வீட்டு அருகில் தண்ணீர் வையுங்கள். அரிசி வடிக்கும் கஞ்சி தண்ணீர், சாதம் போன்றவற்றை வீணாக்காமல் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் உணவாக தானம் செய்யுங்கள். பச்சரிசியால் கோலம் போட சொல்வதும் இதனால் தான்அதிகாலையிலேயே தானம் செய்த பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இப்படி கூறியுள்ளனர்.

மூன்றாவதாக வெள்ளிக்கிழமை தோறும் துவரம் பருப்பு கொண்டு சாம்பார் செய்ய வேண்டும். இதுவும் மகாலட்சுமி கடாட்சத்தை பெருக செய்யும். குடும்பத்தில் வறுமை நீங்க, தன தானியங்கள் பெருகும் எனவே வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு வகையில் துவரம் பருப்பை சேர்த்து சமைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக எல்லோர் வீட்டிலும் சாம்பார் வைப்பது வெள்ளிக்கிழமையில் தான், அதற்கு காரணமும் இது தான்! அப்படி வெள்ளிக்கிழமையில் சாம்பார் வைக்க முடியாவிட்டால், சாதத்துடன் நான்கைந்து துவரம் பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்! இப்படி இந்த மூன்று விஷயங்களையும் தொடர்ந்து கடைபிடித்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், பண வரமும் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழி கிடைக்குமாம்.