கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எக்லெஸ் கேக்!

0
172

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்
சர்க்கரை பொடி – 1/4 கப்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 கப்
உப்பு – 1 கப்

செய்முறை:

  • முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா இவற்றை சலித்து பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும்.
  • உப்பு சூடாவதற்குள், கலந்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கலந்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் பேக்கிங் பௌலில் 1 ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள் ஸ்பூன் மைதா தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  • பிறகு கேக் நன்கு வெந்ததும் பின்னர். பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும். இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், சுவையான எக்லெஸ் கேக் ரெடி.