Monday, December 23, 2024

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை- 5 சுவைகளில் கேக் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டம்…

தமிழக அரசின் நிறுவனமான  ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை     செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி,    பொங்கல் போன்ற  பண்டிகைக்கு பல்வேறு   விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கவும், தனியார் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள முக்கிய ஆவின் பார்லர்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.

Latest article