கிரீன் வேளச்சேரி 12.10.2023 அன்றைய தினம் 25,000 மரக்கன்றுகளை நட்டு பூர்த்தி செய்துள்ளது குருநானக் கல்லூரி என் எஸ் எஸ் மாணவர்கள் சுமார் 50 பேர் கலந்துகொண்டு மரங்கள் நடுவதற்கு பேரு உதவியாக இருந்தது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 100 மரக்கன்றுடன் ஆரம்பித்து இன்றைய தினம் 25,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது சுமார் 12 தண்ணீர் தொட்டிகள் வைத்து அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் பிவிசி குழாய் மூலம் இணைத்து பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை உள்ள சாலையில் அருகில் ரயில்வே அனுமதியுடன் இரும்பு வேலி அமைத்து சென்னை மாநகராட்சி உதவியுடன் மேலும் பல்வேறு தன்னார்வலர்கள் உதவியுடன் ,ரோட்டரி கிளப் சென்னை வேளச்சேரி, அப்பெக்ஸ் கிளப், எக்ஸ்னோரா மற்றும் இப்பகுதியில் உள்ள நல வாழ்வு சங்கங்களின் உதவியுடன் நட்டு பராமரித்த மரங்கள் இன்றைய தினம் சிறப்பாக 8 முதல் 10 அடி வரை வளர்ந்துள்ளது இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் துறை ஆகியவை கிரீன் வேளச்சேரிக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளது. கிரீன் வேளச்சேரி இந்த அளவுக்கு வளர்ச்சிக்கு உதவிய அனைத்து அன்பர்களுக்கும் கிரீன் வேளச்சேரி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் வளர்ந்து ஒரு லட்சம் மரம் இலக்கை அடைய வேண்டும் என்பது கிரீன் வேளச்சேரியின் இலக்காகும் இதற்கும் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

