கிரீன் வேளச்சேரி சார்பாக இன்றைய தினம் வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் மடுவின் கரை மாநகராட்சி பள்ளி என் எஸ் எஸ் மாணவர்கள் சுமார் 60 பேர் கிரீன் வேளச்சேரி அமைப்பால் நடப்பட்ட பத்தாயிரம் மரங்களுக்கு மேல் உள்ள பெருங்குடி எம்ஆர் டி எஸ் ரயில் நிலையம் சாலை அருகில் உள்ள பகுதியில் மாணவர்கள் அங்குள்ள பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர் மேலும் ஆயிரக்கணக்கான மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினர் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக பாத்தி கட்டினர் இவர்களுக்கு வழிகாட்டியாக தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மடுவின் கரை சென்னை மாநகராட்சி பள்ளி மற்றும் வேளச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மூர்த்தி என் எஸ் எஸ் மாணவர்களுடன் கிரீன்
வேளச்சேரி அமைப்பு வாலன்டியர்ஸ் சிறப்பாக பணி செய்தனர் அனைவருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவு கிரீன் வேளச்சேரி சார்பாக வழங்கப்பட்டது மேலும் இங்கு வந்து பணியாற்றிய அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் சுமார் 60 பேருக்கு கிரீன் வேளச்சேரியின் டி ஷர்ட் கொடுக்கப்பட்டது விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் வேளச்சேரி மற்றும் வேளச்சேரி ரோட்டரி கிளப் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்நிகழ்ச்சியின் மூலம் கிரீன் வேளச்சேரி மாணவர்களுக்கு பசுமையை காப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற கோஷத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தது.