Friday, November 22, 2024

கிரீன் வேளச்சேரி மற்றும் குமாரராணி மீனா முத்தையா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நட்டன…

வேளச்சேரி பெருங்குடி எம்.ஆர்.டி.எஸ் வேளச்சேரி எம். ஆர்.எஸ். லிங்க் சாலையில் அருகில் 26-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கிரீன் வேளச்சேரி மற்றும் குமாரராணி மீனா முத்தையா கலை கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 220 பேர் கலந்து கொண்டு 250 மரக்கன்றுகளை நட்டனர் மற்றும் கிரீன் வேளச்சேரி சார்பாக ஏற்கனவே நடப்பட்டுள்ள 5700 மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் ஊற்றினர். சாலையோரம் மரம் வைத்திருக்கும் இடங்களிலும் சுத்தம் செய்தனர் மாணவர்களுடன் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குனர் வருகை புரிந்தனர்.

இவர்களுடன் கிரீன் வேளச்சேரி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு செய்பவர்கள், ரோட்டரி கிளப் சென்னை, வேளச்சேரியில் சேர்ந்த அன்பர்கள், அபெக்ஸ் கிளப்பை சேர்ந்த அன்பர்கள் பல்வேறு பொதுமக்கள் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் என்று சுமார் 300 பேர் கலந்துகொண்டு 300 மரக்கன்றுகள் மற்றும் 200 மூங்கில் கன்றுகள் நடப்பட்டன. மொத்தமாக 6,200 நடப்பட்டுள்ளன. 250 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு ஒத்துழைத்த கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், உதவி பொறியாளர்கள் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கிரீன் வேளச்சேரி டீம், ரோட்டரி கிளப் மற்றும் வேளச்சேரி அபெக்ஸ் கிளப் அனைவருக்கும் கிரீன் வேளச்சேரி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Latest article