74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிரீன் வேளச்சேரி பெருங்குடி எம் ஆர் டி எஸ், வேளச்சேரி எம் ஆர் டி எஸ் சாலையில் அருகில் அன்றைய தினம் தேசிய கொடியை ரோட்டரி சங்கத்தை சேர்ந்த உதவி கவர்னர் திரு ஸ்ரீராம் அவர்கள் கொடியேற்றினார் அதைத் தொடர்ந்து அவருக்கு கிரீன் வேளச்சேரி சார்பாக மரியாதை செய்யப்பட்டது இன்றைய தினம் 3500 மரங்கள் நடப்பட்டு இன்றுடன்

கிரீன் வேளச்சேரி 20 ஆயிரம் மரங்கள் நட்டு பராமரித்து சாதனை புரிந்து வருகிறது இதற்காக சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர் மேலும் இன்றைய தினம் வேளச்சேரி தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர் சுமார் 60க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது விழா இனிதாக முடிவடைந்தது இதற்கு ஒத்துழைப்பு நல்கிய ரோட்டரி சங்கம் மற்றும்

அபெக்ஸ் கிளப் மேலும் கிரீன் வேளச்சேரி அன்பர்கள் சென்னை மாநகராட்சி வேளச்சேரி தீயணைப்பு நிலையம் ஆகியோருக்கு கிரீன் வேளச்சேரி சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் கிரீன் வேளச்சேரி மரங்களை நட்டு பராமரித்து வருவதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் விடுகின்றனர். கிரீன் வேளச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள அனைத்து டோனர்ஸ் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.