காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பசுமை வேளச்சேரி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது…

0
159

காத்மா காந்தியின் 152வது பிறந்த நாள் அக்டோபர் 02ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

நமது வேளச்சேரியில் அக்டோபர் 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பசுமை வேளச்சேரி சார்பாக 300 மரக்கன்றுகள் மற்றும் 100 அரளி பூ செடிகள் நடப்பட்டது. இவ்விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி உதவி கவர்னர் மேலும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் திருசெந்தூர் பாரி மேலும் கோ கிரீன் சேர்மன் சிவபாலன் மேடம் மற்றும் அபெக்ஸ் கிளப் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிரீன் வேளச்சேரி அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவானது முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் என பெரு வாரியாக சுமார் 200 பேர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பசுமை வேளச்சேரி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.