Monday, December 23, 2024

கல்வி மற்றும் நிர்வாகத்தர மேம்பாடு குறித்த மாநாடு…

சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரியில் ‘கல்வி மற்றும் நிர்வாகத்தரம் மேம்படுத்துவதற்கான மாநாடு’ தொடக்க விழா 15.02.2023 அன்று நடைப்பெற்றது. இம்மாநாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழத்தின் கல்வி வல்லுநர் குழு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேராசிரியர் மானஸ் பாண்டே தலைமையில் வணிகவியல்,பொருளாதாரம், உளவியல் சார்ந்த கல்வி வல்லுநர்கள் வருகைப்புரிந்தனர்.


கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சு. சாவித்திரி வரவேற்பு உரையாற்றினார். பின்பு கல்லூரி சார்பில் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் மா.கு. இரகுநாதன் கல்லூரி தொடங்கிய காலம் முதல் இன்று வரை கடந்தவந்த முக்கியமான நிகழ்வுகளை எடுத்துரைத்தார். குரு நானக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் மெர்லின் மொரைஸ் குரு நானக் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானிய குழு வழங்கிய உயர்தர மதிப்பீடு பற்றியும் பல்வேறு புதுமையான புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களையும் குறித்து விளக்கினார்.


டாக்டர் மனோஜ்குமார் பாண்டே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். டாக்டர் மானஸ் பாண்டே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி திட்டங்கள் , கல்வித்தர மதிப்பீடு ஆலோசனைகள் குறித்து எடுத்துரைத்தார்.


கல்லூரி அகத்தர மதிப்பீடு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுவாதி பாலிவால் பல்கலைக்கழக மானியக்குழு ஒருங்கிணைப்பு முறைகள் குறித்து பேசினார். குரு நானக் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் மஞ்சித் சிங் நய்யார் பல்கலைக்கழகத்திற்கும் குருநானக் கல்லூரிக்கும் இடையே நிகழ்ந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கல்லூரி தர மதிப்பீடுகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நிர்மலா எஸ். மௌரியா வழங்கிய ஆலோசனை குறித்தும் வட இந்தியாவில் தமிழ் மொழி வளர்ச்சி பெறுவதற்கு பல்கலைக்கழத்தில் நிரந்தரமான மையத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் பேசினார். கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அனிதா மாலிசெட்டி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Latest article