Monday, December 23, 2024

கடன் பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ கூற வேண்டிய மந்திரம்…

நம் வாழ்க்கையில் எவ்வித கடன் தொல்லையும் இல்லாமல், நிம்மதியாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்றால், கீழுள்ள நரசிம்ம ஸ்லோகத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், நிம்மதியாக வாழலாம்.

ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண
க்ராம: க்ஷணம் பாணிஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ

யத் ப்ராதுர்ப்பவநா தவந்த்யா ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸ{ர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்

நம்பனே! நவின் றேத்தவல் லார்கள்
நாத னேநர சிங்கம தானாய்
உம்பர் கோனுல கேழு மளந்தாய்!
ஊழி யாயினாய்! அழிமுன் னேந்தி!
கம்ப காமகரி கோள்விடுத் தானே
கார ணா! கடலைக்கடைந் தேனே!
எம்பி ரான்! என்னை யாளுடைத்தானே!
ஏழை யேனிட ரைக்களை யாயே.

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்
கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்
தௌ;ளய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.

ஆடியாடி யகம்க ரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்கா வென்று,
வாடி வாடுமிவ் வாணுதலே

Latest article