Monday, December 23, 2024

எதிரிகள் விலக பரிகாரம்

இந்த உலகத்தில் எதிரிகளுடைய சூழ்ச்சியிலிருந்தும்,     நம்   மீது பொறாமைப்படுபவர்களுடைய கண்களில் இருந்தும் தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி  இருந்தவங்க,  இப்போ எப்படி மாறிட்டா. இவளுக்கெல்லாம் இப்படி ஒரு வாழ்வு  எங்கிருந்துதான்   வந்ததோ? இவங்களுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறதோ  தெரியவில்லை,   என்று பெருமூச்சு விட்டால் போதும். 

வந்ததெல்லாம் வந்த வழியே திரும்பி சென்று விடும். வியாபாரத்தில் கொஞ்சம் முன்னுக்கு வந்தால் எதிரிகள் தொல்லை தாங்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது எப்படி. துர்க்கை அம்மனின் பாதங்களை சரணடைவது தான் இதற்கு ஒரே வழி. கெட்டதை துவம்சம் செய்ய அவளை விட்டால் வேறு யாரு இருக்கிறார்கள். எதிரி தொல்லையில் இருந்து விலக, கண்திருஷ்டியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய துர்க்கை அம்மன் வழிபாடு.

எதிரி தொல்லையில் இருந்து விலக
இந்த பரிகாரத்தைச் செவ்வாய் கிழமை அன்று செய்யுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். துர்க்கை அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் எந்த அம்மன் படம் இருந்தாலும் சரி, அந்த அம்மனுக்கு முன்பாக ஒரு சின்ன தட்டு வையுங்க. அந்த தட்டுக்கு மேலே ஒரு வெற்றிலை, அந்தவெற்றிலைக்கு மேலே கொஞ்சமாக பச்சரிசி வையுங்கள்.

இப்போது உங்களுடைய கையில் சின்ன கிண்ணத்தில் வாசம் நிறைந்த தாழம்புக்கு   குங்குமம்   எடுத்துக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை எடுத்து அந்த பச்சரிசியின் மேல் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். 27 முறை இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.

கொஞ்சம்      கொஞ்சமாக குங்குமத்தை எடுத்து அந்த பச்சரிசியில் போடுங்கள். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து துர்கா தேவியை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ‘என் மீது எந்த தவறும் இல்லை. நான் யாருக்கும் துரோகம் நினைக்கவில்லை.      எதிரிகளால் என்னுடைய தொழிலுக்கு பிரச்சனை வரக்கூடாது. என் தொழிலுக்கும் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் யாருடைய கண் திருஷ்டியும் விழக்கூடாது’. அதற்கு துர்க்கை அம்பாளான நீ தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அம்பாளிடம் உரிமையோடு கேளுங்கள். 

பிறகு அந்த வெற்றிலையில் இருக்கும் அரிசியை அந்த குங்குமத்தோடு கலந்து கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் அட்சதை    இருப்பது போல, சிவப்பு நிறத்தில் இந்த அட்சதை இருக்கும். இதை எடுத்து ஒரு பேப்பரில் கொட்டி மடித்து, ஒரு கவரில் போட்டு பேக் பண்ணிக்கோங்க. இதை எப்போதும் உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். பாக்கெட்டில், ஹேண்ட் பேக்கில், பர்ஸில் இப்படி உங்களோடு இதை வைக்கவும். உங்களை சுற்றி அந்த துர்க்கை அம்பாளின் பாதுகாப்பு இருக்கும்.
எதிரிகளாலோ அல்லது கெட்ட எண்ணம் கொண்டு கண் திருஷ்டியோடு உங்களை பார்ப்பவர்களாலோ, உங்களுக்கோ உங்கள் தொழிலுக்கோ உங்கள் குடும்பத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இது ஒரு எளிமையான பரிகாரம் தான். ஆனால் கையில் வைத்திருக்கும் பச்சரிசிக்கு 48 நாள் தான் பவர் இருக்கும். 

அதன் பிறகு மீண்டும் நீங்கள் அந்த பச்சரிசியை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் மேல் சொன்ன பூஜையை வீட்டில் செய்ய வேண்டும். இந்த பச்சரிசியை உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூட பையிலும் வைக்கலாம். ஆண் பெண் இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளிக்கூட பையில் இந்த பச்சரிசியை வைத்து அனுப்பலாம்.
துீட்டு உள்ளவர்கள் இதை தொடக்கூடாது என்று எந்த கணக்கும் கிடையாது. பெண் பிள்ளைகள் பத்திரமாக கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தியிடம் இருந்து பாதுகாப்பாக, பள்ளி கல்லூரிக்கு சென்று வருவார்கள்.

Latest article