“இளைஞர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி” – முகாம்…

0
146

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 05.10.2021 அன்று மாணவர்களுக்கான ‘பெரு விற்பனை பயிற்சி முகாம்” தொடங்கி வைக்கப்பட்டது. ஹனிவெல் நிறுவனமும் ஐசிடி கல்விக்குழுமமும் இணைந்து மாணவர்களுக்கான ‘இளைஞர் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி” – முகாம் திட்டத்தினை அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக குருநானக் கல்லூரி மாணவர்களுக்கு 34 நாட்கள் 100 மணி நேர பன்னாட்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஐசிடி கல்விக் குழுமத்தின் தலைமை பயிற்சியாளர் ஜி.வெங்கடேஷ் அவர்கள், இச்சான்றிதழ் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்கள் பயிற்சி பெறுவதோடு மிகப்பெரிய வேலைவாய்ப்பினையும் பெறுவார்கள் என்று கூறினார். இத்தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கு. இரகுநாதன், குருநானக் கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய புலமுதன்மையர் முனைவர் ஆனந்த் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.