R. சிந்தியா என்பவர் ‘இளம் சாதனையாளர்’ விருது பெற்றார்.

0
252

R. சிந்தியா என்கிற ஒன்பது வயது சிறுமிக்கு நமது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி குழு ‘இளம் சாதனையாளர்’ விருதை வழங்கியது. இவர் வேளச்சேரியில் வசித்து வருகிறார். தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர் நடன போட்டி, பேச்சு போட்டி, அறிவியல் சோதணை, யோகா, கராத்தே, ஸ்லோகம், கர்நாடக சங்கீத இசைப் போட்டி, நீச்சல், மாறுவேடச் சுற்று, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, மேஜிக் ஷோ, கிளே மோல்டிங், பெஸ்ட் அவுட் ஆட் வேஸ்ட், புட்பால், போட்டோகிராபி, எழுத்துப்போட்டி, மரத்தான், ஓட்டப் பந்தயம் ஆகிய பல விதமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாற்பத்தி நான்கு பதக்கங்களும், இருபத்திரண்டு கோப்பைகளும், மேலும் சில பரிசு பொருட்களும் வாங்கி குவித்துள்ளார்.

இவற்றுள் பள்ளி அளவிலான போட்டிகள் மட்டுமின்றி இடைநிலை பள்ளிகளுக்குள் நடைபெற்ற போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் அடங்கும். இவர் அப்துல் கலாம் மெமோரியல் அவார்டு, ஞான சுடர் அவார்டு, வித்தக சிற்பி அவார்டு, மல்டி டேலண்டட் கிட் அவார்டு போன்ற பல பட்டங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்.

சுமார் எழுபத்தைந்து பரிசுகளைப் பெற்ற இவர் சில யூ-டியூப் வீடியோக்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ISRO நடத்திய WORLD SPACE WEEK என்ற விழாவில் Dr. J. ராதா கிருஷ்ணன் I.A.S. அவர்களிடமிருந்து 2019ஆம் ஆண்டில் பரிசு பெற்றுள்ளார்.

நேரு ஸ்டேடியத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த சிறு வயதிலேயே இத்தனை சாதனைகளைப் புரிந்த இந்த இளம் சாதனையாளருக்கு இந்த விருதினை வழங்கியமைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவரது வருங்காலம் மிக சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துகள்.
இவரைப் போன்ற இளம் சாதனையாளர்களை ஊக்குவித்து உலகரியச் செய்ய வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள்.


உங்கள் வீட்டிலும் இதேப் போல் குறைந்தபட்சம் பத்து பரிசுகளைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளைப் பற்றிய தகவல்களை ஆதாரங்களோடு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய புலனம் எண் 7305837388. வேளச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படும்.