Monday, December 23, 2024

இரவு உறங்க செல்லும் முன் இந்த ஒரு வார்த்தையை உங்கள் உள்ளங்கையில் எழுதிய பிறகு உறங்கினால் உறங்க விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகள் யாவும் விடியும் முன்பே உங்களை விட்டு விலகி விடும்…

ஒவ்வொரு மனிதனின் உறக்கமும் இறப்பிற்கு நிகராகவே கருதப்படுகிறது. உறங்கும் நேரத்தில் கடைசியாக நாம் சிந்திக்கும் எண்ணமும் செயலும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். அதே போல் தான் விடியலும் ஒருவர் கண் விழிக்கும் போது அவர்களுக்குத் தோன்றும் முதல் எண்ணங்கள் தான் அவருடைய அன்றைய நாளின் செயல்களாக இருக்கும்.    
இந்த காரணத்தினால் தான் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் தூங்கும் போது கண்டதை நினைத்துக் கொண்டு தூங்காதே என்று சொல்வார்கள். எனினும் உறங்கும் போது நீங்கள் நல்லவற்றை சிந்தித்தால் உங்கள் ஆழ்மனதும் அதை ஏற்றுக் கொள்ளும் தேவையற்றதை சிந்தித்தால் அதுவே உங்கள் செயலாக மாறி விடும்.

இந்த செயல் எப்படி ஒரு மனிதனை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லுமோ, அதே போல் ஒவ்வொரு மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தையும் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாகவே சிந்தித்து தனக்கு நல்லது தான் நடக்கும் எனக்கு    தீயது   நடக்காது   என்பதை அவர்கள் ஆழ்மனதில்   பதிய வைத்து அதை வார்த்தைகளாக வெளிப்படுத்தும் போது அவர்களுடைய   வாழ்க்கையும்  நல்ல முறையில் செயல்படும். இதை தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லி வைத்தார்கள்.

பிரச்சனைகள் தீர சொல்ல வேண்டிய வார்த்தை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் பிரச்சனைகள் தீரவும் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்களை சந்திக்கவும் அனுதினமும் சொல்ல வேண்டிய ஒரு வார்த்தையை பற்றியும் இரவு உறங்க செல்லும் முன் இந்த வார்த்தையை நாம் எப்படி பயன்படுத்தினால் நம் வாழ்க்கை சிறக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

தினமும் இரவு உறங்க செல்லும் முன் ஐந்து நிமிடம் அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விடும் அதை நான் சரி செய்து விடுவேன் என்ற எண்ணத்தை வரவழைத்துக் கொண்டு உங்களுடைய வலது கையில் ஓம் நமசிவாய என்ற இந்த வார்த்தையை எழுத வேண்டும். இதில் குறிப்பாக பின்பற்ற வேண்டியது வலது கையில் இடது கையை வைத்து எழுத வேண்டும். அது சரியாக எழுத வரவில்லை என்றாலும் பரவாயில்லை வலது கையில் தான் இந்த வார்த்தையை எழுத வேண்டும்.

முதல் நாளில் இதை எழுதி உறங்கி மறுநாள் எழுதும் பொழுதே உங்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தும் தெளிவடைந்து உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்க போவதற்கான அறிகுறிகள் புலப்படும். இதை தினமும் இரவு உறங்க செல்லும் முன் இப்படி எழுதுவதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொள்வதோடு, முடியும் போதெல்லாம் இந்த வார்த்தையை நீங்கள் உச்சரித்துக் கொண்டே இருந்தால் பண பிரச்சனை, திருமண தடை, குழந்தை பேறு, சொந்த வீடு இப்படி உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது. 

அனைத்திற்கும்    மூலாதாரமாக விளங்கும் ஈஸ்வரரின் இந்த நாமத்தை அனுதினமும் உச்சரிக்கும் போது நம்முடைய துன்பங்களையும் துயரங்களையும் அவர் ஏற்றுக்  கொண்டு நம்மை நல்ல முறையில் வாழ    வைப்பார்  என்ற  இந்த நம்பிக்கையோடு  நம்பிக்கை  உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற  இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest article