Monday, December 23, 2024

இனிப்பான ராகி பணியாரம்!

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பால் – 1 கப்
சோடா உப்பு – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
  • பணியார கல்லானது சூடானதும், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள பணியார மாவை குழியினுள் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.
  • சுவையான ராகி பணியாரம் ரெடி.

Latest article