Thursday, November 21, 2024

புரட்டாசி மாத பௌர்ணமி விரதம், பூஜையின் பலன்கள் !

புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாகப் பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினமும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது.

புரட்டாசி பௌர்ணமி அன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் விளங்குவாள். அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமமும் உண்டு.

இந்த அற்புத நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு. அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள், அன்னையின் திருநாமத்தை உச்சரித்தபடியே தியானமும், தவமும் செய்து அருள் பெறுவார்கள். அவர்களுக்கு நடுநிசி நாளாக இருக்கும் அந்த நாளில், தியானம், ஜெபம், பிராணாயாமம், பூஜை, தவம், செய்வதால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விரதமிருந்து வீட்டிலேயே சிவ வழிபாடு செய்வது அல்லது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதால், தெய்வங்களின் அனுக்கிரகம் வீடு தேடி வரும்.

Latest article