Monday, December 23, 2024

ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:-
3 tsp எண்ணெய்
1 tsp கடுகு
1 tsp உளுந்தம் பருப்பு
10 வர மிளகாய்
கருவேப்பிலை தேவையான அளவு
1 கப் பூண்டு இடித்து எடுத்தது
5 பச்சை மிளகாய் நறுக்கி இடித்து
4 பெரிய வெங்காயம் நறுக்கி எடுத்தது
1 tsp மஞ்சள் தூள்
500 கிராம் கோவக்காய்
உப்பு தேவையான அளவு
4 தக்காளி நறுக்கி எடுத்தது
தண்ணீர் தேவையான அளவு


அரைப்பதற்கு
1/2 tsp முழு தனியா
10 வரமிளகாய்
கருவேப்பிலை தேவையான அளவு
1/2 கப் எள்ளு
1/2 கப் வறுத்த வேர்கடலை
2 tsp சீரகம்

செய்முறை:-
முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து எண்ணெயில் பொரிய விடவும்.
அதோடு இடித்து வைத்த பூண்டு பொரிய பின் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், நறுக்கி எடுத்த கோவக்காய் சேர்க்கவும்.
பின் உப்பு சேர்த்து கிளறி விட்டு, அதோடு நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து, காய் வேகும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி வைக்கவும். இப்போது மற்றொரு கடாயில், முழு தனியா, வர மிளகாய், கருவேப்பிலை, எள்ளு சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வறுக்கவும். ஆதோடு வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.

வறுத்த வேர்க்கடலை அதிகமாக சேர்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும், பின் சீரகம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வறுத்து எடுத்து கடாயை இறக்கவும்.
வறுத்து எடுத்ததை, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இப்போது முடி வேக வைத்த கோவக்காய் நன்கு வெந்திருக்கும். அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து, உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்து கலந்து விட்டு, கடாயை இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் தயார்.

Latest article