“ஆதன் யாக்கை பந்தனம்” புத்தக வெளியீட்டு விழா

0
538

எக்ஸ்பிரஸ் வேளச்சேரி எடிட்டர் திருமதி சரண்யா ராஜேஷ் அவர்கள், தனது பெற்றோர்களான தெய்வத்திரு T.சுப்பிரமணியன் அவர்கள் (பவானி பில்டர்ஸ்) மற்றும் தெய்வத்திருமதி பவானி சுப்பிரமணியன் அவர்களுக்குமான சமர்ப்பணமாக எழுதிய ‘ஆதன் யாக்கை பந்தனம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா 01.01.2021 அன்று எக்ஸ்பிரஸ் வேளச்சேரி அலுவலகத்தில் நடைபெற்றது.

உடல் உயிர் மற்றும் ஆன்மாவின் உன்னதமான உணர்வுகளின் உண்மையைப் பற்றி விளக்கக்கூடிய இந்த நாவலை, Ateliers Fitness நிர்வாகியும் Mr. World என்ற பட்டத்தின் உரிமையாளருமான திரு. அரசு மௌனகுரு அவர்கள் வெளியிட்டார். அவரது வருகைக்கு நன்றி பாராட்டி எக்ஸ்பிரஸ் வேளச்சேரியில் நிர்வாகியான திரு. ராஜேஷ் அவர்கள் அன்பு பரிசளித்து கௌரவித்தார்.