Sunday, November 24, 2024

ஆடி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இதை மட்டும் நீங்கள் தவறாமல் செய்து விட்டால் இது வரை வராத குலதெய்வம் கூட வீடு தேடி வந்து உங்களை வாழ வைக்கும்.

ஆடி மாதத்தின் விசேஷங்களை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய தேவையில்லை. பொதுவாகவே ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அதிலும் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் குலதெய்வ வழிபாடும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதத்தில் நம் வீட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குலதெய்வம் வீட்டிற்குள் வர என்ன செய்ய வேண்டும்
இந்த குலதெய்வ வழிபாடு ஆனது ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் செய்ய வேண்டும். ஏனெனில் குலதெய்வம் என்றாலே நம் குலத்தை காக்கும் தெய்வம் என்று தான் பொருள். இந்த தெய்வத்தின் அருளை நாம் பெறுவது மிகவும் முக்கியம். அப்படியான குலதெய்வம் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதை நேரத்தில் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமலும் இருக்கலாம். இதை எல்லாம் கூட இந்த எளிய பரிகாரத்தின் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
இதற்கு ஆடி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை மிக சிறந்த நாள். இதில் இந்த பரிகாரத்தை முடியாதவர்கள் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்ட பிறகு கோலத்தின் மேல் கொஞ்சம் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். இது அம்மனை வீட்டிற்குள் அழைப்பது போல ஆகும்.
அதே போல் நிலைவாசல் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அதன் அருகே ஒரு தாம்பாள தட்டில் கொஞ்சம் வேப்பிலையை பரப்பி வைத்து அதன் மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஒரு ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வம் போன்றவற்றை மனதார நினைத்துக் கொண்டு நீங்கள் எங்கள் வீட்டிற்குள் வந்து எங்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
இங்கு தீபம் ஏற்றிய பிறகு நேராக பூஜை அறை சென்று அங்கு காமாட்சி அம்மன் தீபம் ஏற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து குலதெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் நிச்சயம் குலதெய்வம் நம் வீட்டிற்குள் வரும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் கட்டாயம் வீட்டு வாசலில் வேப்பிலை சொருகி வைக்க வேண்டும் அதே போல் வாசலில் எலுமிச்சை பழத்தையும் வைக்க வேண்டும்.
இந்த வேப்பிலையை எலுமிச்சை பழம் இரண்டில் வாசத்திற்கு நிச்சயம் நம்முடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் அனைத்தும் நம்மை தேடி வரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வேப்பிலையும் எலுமிச்சை பழமும் வாட கூடாது. இது கொஞ்சம் வாடும் போதே வேறு புதிதாக மாற்றி வைத்து விடுங்கள்.
அது மட்டும் இன்றி நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது வாசலிலோ பித்தளை சோம்பில் தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரில் மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் வேப்பிலை ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு வைத்து விடுங்கள்.
இப்படி செய்வதன் மூலமும் குலதெய்வம் நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. குலதெய்வம் வீட்டிற்குள் வந்து விட்டால் அந்த வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் தூரப் போய் வீடு லட்சுமி கடாச்சம் நிறைந்து இருக்கும்.
இந்த பரிகாரத்தை இந்த ஆடி மாதத்தில் செய்து அனைவரும் குலதெய்வத்தின் அருளாசியை பெறலாம் என்ற ஒரு தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest article