Monday, December 23, 2024

ஆடி மாதம் தீப வழிபாடு

ஆடி மாதம் என்பது வானியல் ரீதியாக பார்க்கும்போது கடுமையான கோடை காலம் தீர்ந்து, தீவிர மழைப்பொழிவு ஏற்படுவதற்கு இடைப்பட்ட ஒரு மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பலம் வாய்ந்த காற்று அதிகம் வீசுவது வழக்கம். வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்திருக்கின்ற இந்த மாதத்தில்தான் ஈக்களின் உற்பத்தி அதிகமாகி, அதன் மூலம் உணவுகளில் கிருமித் தொற்று ஏற்பட்டு பல வகையான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

ஆடி மாதத்தில் வீட்டுக்கு முன்பாக தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றும் போது வீட்டிற்கும், அதில் வசிப்பவர்களுக்கும்  நன்மை  பயக்கும்  என  ஆன்மீக சான்றோர்கள் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல்     காலை 6.30 மணி வரையான காலத்திலும், பிரதோஷ      கால நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரை வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றுவதால் நோய் பரப்பும் கிருமிகள், ஆபத்தான பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டை அணுகாமல்  தடுப்பதோடு,  தெய்வீக ஆற்றல் நமது வீட்டிற்குள்ளாக  வருவதற்கு  வழி  வகை  செய்கிறது.
 
கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். 

மேற்குத் திசையில் தீபம் ஏற்றுவதால் பணம் சம்பந்தமான பிரச்சனைகள். கடன் தொல்லைகள் நீங்கும். 

வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். திருமணம் கைகூடும். 

தேற்கு திசை என்பது எமதர்மன் திசை அல்லது இறந்தவர்களின் திசை என்பதால் எக்காரணம் கொண்டும் வீட்டில் இருப்பவர்கள் இந்த திசையில் தீபங்களை ஏற்ற கூடாது. எனினும் கோயில்களில் இறந்தவர்களின் நற்கதிக்காக தெற்கு திசை பார்த்தவாறு மோட்ச தீபம் ஏற்றலாம்.

Latest article