ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்…

0
127
    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயணக் காலம் என்றும் தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் ஆகும். சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். அந்த வகையில் நாளை முதல் ஆடி மாதம் தொடங்குகிறது.

ஆடி மாதத்தின் சிறப்புகள்:
ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.
அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் குளிர்ச்சியான கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து அம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.
மேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான விஷேச தினங்களும் அதிகமாக வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
ஆடி அமாவாசை:
ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவது ஆடி அமாவாசை, 2-வது புரட்டாசி மகாளய அமாவாசை, 3-வது தை அமாவாசை. இந்த நாளகளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நாம் செய்த கருமங்கள் நீங்கி நன்மை அளிக்கும்.
ஆடி பதினெட்டு:
ஆடி மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் (காவிரி) புது வெள்ளம் பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள். அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள்.