Monday, December 23, 2024

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- இந்தியா-மலேசியா மோதல்…

               7-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன்      ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டுக்கு ராபின் முறையில் ஒரு தடவை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு   தகுதி   பெறும்.    2-வது நூளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதே போல் பாகிஸ் தான்- தென்கொரியா அணிகள் மோதிய ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில்    'டிரா'   ஆனது. இன்னொரு ஆட்டத்தில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.  6.8.2023 இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பலவீன மான ஜப்பான் அணியை நேற்று வீழ்த்த முடியாமல் போனது ஏமாற்றமே. மலேசியா வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும். மலேசிய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி கரமாக வீழ்த்தி இருந்தது.  இதேபோல் இந்தியாவுக்கும்    அதிர்ச்சி கொடுத்து   ஹாட்ரிக்  வெற்றியை பெறும் ஆர்வத்தில் மலேசியா உள்ளது.

Latest article