Monday, December 23, 2024

ரவா பாயாசம்

தேவையான பொருட்கள்:
ரவை – 1/2 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – 3 ஸ்பூன்
ஏலக்காய் – 5
முந்திரி – 2 ஸ்பூன்
உலர் திராட்சை – 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, ரவை சேர்த்து 3 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
  • பின்பு அதில் பாலை ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • ரவை நன்கு வெந்ததும், அதில் ஏலக்காயை தட்டிப் போட்டு கிளறி விட வேண்டும். பிறகு அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரவா பாயாசம் தயார்.

Latest article