Monday, December 23, 2024

பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1/2 கப்
வெல்லம் – 1/4 கப்
தண்ணீர் – 1,1/4 கப்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
எண்ணெய் – சிறிது

செய்முறை:
* முதலில் வெல்லத்தை கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும். பின்பு அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விடவேண்டும்.
* ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.
* மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவி அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.


Latest article