Sunday, November 24, 2024

அம்மனின் அருள் நிறைந்த ஆடி மாதத்தில் இதையெல்லாம் மட்டும் தவறாமல் செய்தால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம்…

ஆடி மாதத்திற்கான சிறப்புகளை பற்றி சொல்லத் தொடங்கினால் நாம் அளவில்லாமல் சொல்லிக் கொண்டே செல்லலாம். அவ்வளவு சிறப்புமிக்க வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் தான் இது. இந்த மாதத்தில் முழுக்க முழுக்க நாம் அம்பிகைக்கு தான் முன்னுரிமை கொடுத்து வணங்குவோம். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த மாதத்தில் நாம் செய்யும் சில காரியங்களால் நம் குடும்பம் எப்போதும் செல்வ செழிப்போடு வாழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியது இந்த மாதத்தில் அம்பிகையானவள் நம் இல்லம் தேடி வருவாள் என்றும் ஆகையால் தான் இந்த மாதங்களில் நாம் அம்பிக்கைக்கான அனைத்து பூஜை புனஸ்காரங்களையும் செய்து அவரின் அருளாசியை முழுவதுமாக பெற வேண்டிட வேண்டும். இதுனால் தான் பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

இந்த காலங்களில் வீட்டில் பெண்கள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது. ஆதே போல் மாலை அந்தி சாயும் நேரத்தில் சரியாக வீட்டில் விளக்கு ஏற்றி விட வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் வரலட்சுமி தாயாரும் தன் இல்லம் தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாதத்தில் வீட்டில் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தவறியும் அடுத்தவரை புறம் கூறுவது, சபிப்பது, பெண் குழந்தைகளை திட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. பொதுவாக இதை எல்லாம் எப்போதுமே செய்யக் கூடாது என்றாலும், அம்மனனே நம் இல்லம் தேடி வரும் இந்த மாதத்தில் நிச்சயம் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆண்கள்   வீட்டில்  இருக்கும் பெண்களை மதிப்பும் மரியாதைடனும் நடத்த வேண்டும். தாயாரின் ஆசீர்வாதங்களை பெற வேண்டும். உடன் பிறந்த சகோதரிகளை மகாலட்சுமி தாயாரின் மறு உருவமாகவே பாவித்து அவர்களுக்கான மரியாதைகளை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளை பாலா திரிபுரசுந்தரி ஆக பாவித்து அவர்களை வணங்க வேண்டும். சில இடங்களில் பெண் குழந்தைகளை வைத்து கன்னியா பூஜை செய்து ஆசீர்வாதங்களை பெறுவார்கள். அது போன்ற சடங்குகளை செய்பவர்கள் இந்த மாதத்தில் நடை செய்து வயது வித்தியாசம் பார்க்காமல் பெண் குழந்தைகளிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அந்த பாலா திரிபுரசுந்தரி நம் இல்லம் தேடி வந்து ஆசீர்வாதம் வழங்குவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் செய்வதோடு வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கு தினமும் இரண்டு மல்லிகை மலரையாவது சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதை ஆண் பெண் அனைவருமே செய்யலாம். அதே நேரத்தில் அம்மன் ஆலயங்களில் மாலை நேரத்தில் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலங்களை வழங்கலாம். இதையும் ஆண்கள் பெண்கள் இருவரும் செய்யலாம். குறிப்பாக திருமண பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் இதை செய்வது நல்லது.

சக்தி வடிவான அம்பிகை நம் இல்லம் தேடி வந்து நமக்கு அருளாசி வழங்கி நம் குடும்பத்தை வளமுடன் வாழ வைக்க இவையெல்லாம் செய்வது மேலும் மேலும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு நாமே செய்யும் சில வழிமுறைகள் என்று சொல்லலாம். இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதையெல்லாம் நீங்களும் கடைப்பிடித்து அம்பிகையின் அருளாசியை முழுவதுமாக பெறலாம்.

Latest article