வேளச்சேரி அன்னை இந்திராநகர் ஞான சித்தி விநாயகர் திருக்கோயில் 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக 6 நாட்கள் நடைபெற்றது 5 நாட்கள் சகஸ்ரநாம ல சாரசனையுடன் ஆறாம் நாள் சதுர்த்தி அன்று எல்லாம் வல்ல விநாயகர் பெருமானுக்கு காலையில் சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் பின்பு அனைத்து பக்த கோடிகளுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது அதற்குப் பிறகு மாலை ஏழு மணி அளவில் எல்லாம் வல்ல விநாயகர் பெருமானுடைய உற்சவமூர்த்தி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் அன்னை இந்திரா நகர் அண்ணா நகர் டான்சி நகர் வழியாக திருக்கோயில் சென்றடைந்தது வான வேடிக்கைகளுடன் ஊாவலம் மிகச் சிறப்பாக சென்றடைந்தது திரளாக மக்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர் விழாவிற்கு உழைத்த பொருளுதவி சரீர உதவி செய்த அனைவருக்கும் ஞான சித்தி விநாயகர் திருவருட் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.
