அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டாமலே உள்ளே வர வேண்டுமா?

0
243
முழுமுதற் கடவுளான விநாயகரை பற்றி நாம் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் இவரை வணங்கிய பிறகு தான் செய்வார்கள். அதே நேரத்தில் அனைத்து   கடவுளுக்கும்    மூத்த கடவுளாகவும் இவர் விளங்குகிறார். இவரிடம் நாம் என்ன வேண்டி கேட்டாலும் அதை இல்லை என்று சொல்லாமல் அருள்பாலிப்பவரும் இந்த விநாயகர் தான். அப்படியான இவரை வீட்டில் நாம் எப்படி வைத்து வணங்கினால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்டம்    வர   விநாயகரை வழிபடும் முறை முதலில் எப்படியான விநாயகரை வைத்து வழிபட வேண்டும் என்று   தெரிந்து   கொள்வோம். விநாயகருடைய தும்பிக்கையானது இடது புறம் பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படியான விநாயகரை தான் நாம் எப்படி வீட்டில் வைத்து வணங்க வேண்டும். இந்த விநாயகருக்கு   தான்   நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடிய சக்தி அதிகம் உண்டு.

அது போல இந்த விநாயகரை நாம் கிழக்கு திசை அல்லது மேற்கு திசையை பார்த்தவாறு தான் வைத்து வணங்க வேண்டும். மற்ற திசையில் வைத்து வணங்குவது அத்தனை சிறப்பானதாக இருக்காது. அதே போல் ஒரு சில இடங்களில் இந்த விநாயகரை வீட்டில் பாத்ரூம் சுவரை ஒற்றிய படி பூஜை செல்பை வைத்து வைத்திருப்பார்கள் அல்லது விநாயகர் படத்தை பூஜை அறையில் இல்லாது வரவேற்பறையிலும் படங்களாகவும் சிலைகளாகவோ வைத்திருப்பார்கள். அந்த சுவருக்கு பின்புறம் கழிவறை இருந்தால் நிச்சயமாக அங்கு விநாயகரை வைக்கக் கூடாது.

இன்னும்   சில  இடங்களில் விநாயகரை மாடிப்படி ஏறும் இடங்களுக்கு கீழே சின்னதாக அறைப் போல கட்டி அங்கு தனியாக வைத்து வழிபடுவார்கள். இப்படி வரவேற்பறை அல்லது வீட்டிற்கு வெளியே என வைத்து சில இடங்களில் அதை ஒரு  வாஸ்து   போலவும் பயன்படுத்தி   வருகிறார்கள்  அது போலவும் செய்யக் கூடாது. ஏனெனில் விநாயகரை வைத்து நாம் அவர் மேல் ஏறி நடப்பது போல ஆகும் அப்படி வைக்கும் போது வீட்டிற்கு நிச்சயம் கஷ்டங்கள் வரும்.

பேரும்பாலும் உலோகங்களான விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான அதிர்ஷ்டத்தை தரும். அந்த விநாயகரும் இடது புறம் தும்பிக்கை இருப்பது போல இருக்க வேண்டும். இந்த விநாயகர் வைக்கும் திசையும் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து வைத்து வைத்து விட்டு, நீங்கள் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் இந்த விநாயகர் முன்பு நின்று ஒரு கணம் வேண்டிய பின் சென்று நீங்கள் செல்லும் காரியம் சிறப்புடன் அமைவதுடன் அதிர்ஷ்டத்தை நீங்கள் தேடி செல்லாமல் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகளை இந்த விநாயகர் ஏற்படுத்தி தருவார்.

விநாயகர்  வழிபாடு  என்பது அனைவரும் செய்யக்கூடியது தான். எந்த சுவாமி படங்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் விநாயகர் படம் நிச்சயம் எல்லோர் வீட்டிலும் இருக்கும். அப்படியான படங்களை இந்த திசையில் இது போல வைத்து வணங்கி பாருங்கள் கேட்டதை கொடுக்கும் விநாயகர் இனி நீங்கள் கேட்காமலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவார் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.