Thursday, December 26, 2024

அடையாறு, வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். பாலங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம்…

                        பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி, கண்கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைதல், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், சாலைகளின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் அழகுபடுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட வீராங்கல் ஓடை அருகே உள்ள எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி உள்வட்டச் சாலை புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.41.25 லட்சம் மதிப்பீட்டிலும், செடிகள் நடுதல், பசுமைப் புல்வெளிகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest article