68வது குடியரசு தினம்; தமிழக முதல்வர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை!

0
220

நாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ஓ.பன்னிர் செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற முதலமைச்சர், உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முப்படைத் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடியரசு தின நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து முப்படையினரின் பீரங்கி, சிறிய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக போலீஸ் பிரிவுகளின் அணிவகுப்பு, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.