2016-ம் ஆண்டின் இன்ஸ்டாகிராம் இளவரசி செலினா கோம்ஸ்!

0
242

பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான இன்ஸ்டாகிராமை உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் அதிகமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நட்சத்திரங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமின் இந்த வருட இளவரசி என்ற பட்டம் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ்க்கு கிடைத்துள்ளது. நடிகை, பாடகி, கதையாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட செலினாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைக் குவித்துள்ளன.

கோக் பாட்டிலுடன் செலினா நிற்கும் புகைப்படம் அதிகபட்சமாக 5.9 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுதவிர அதிக லைக்குகளைப் பெற்ற முதல் ஐந்து புகைப்படங்களும் செலினாவுடையதுதான்.

இதன் காரணமாக 2016-ம் ஆண்டின் இன்ஸ்டாகிராம் இளவரசி பட்டம் செலினா கோம்ஸ்க்கு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 103 மில்லியன் பேர் செலினாவைப் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.