ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ்!! (வீடியோ)

0
236

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 8-ம் தேதி புதியரக மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற அகஸ்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ஆர்.வி.’ என்னும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ரதம் போன்ற வடிவமைப்புடன் காட்சி அளிக்கும் இந்த பஸ்சுக்குள் வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன….