ஸ்மார்ட்போன்களை பாதித்து, தகவல்களை திருடும் ‘கூலிகன்’ வைரஸ்!!

0
243

ஆண்ட்ராய்டு 4.0 கிட்காட் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் போன்ற இயங்குதளம் கொண்ட கருவிகளை தாக்கும்படி கூலிகன் மால்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 74 சதவிகித ஆண்ட்ராய்டு கருவிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் செக் பாயின்ட் எனும் மென்பொருள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலிகன் தாக்குதல் மூலம் மின்னஞ்சல் முகவரிகள், அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மிக முக்கியத் தகவல்கள் ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ் மற்றும் இதர சேமிப்பு மையங்களில் இருக்கும் தகவல்களை திருட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான கூகுள் அக்கவுண்ட்களை கூலிகன் மால்வேர் பதம் பார்த்திருக்கிறது. கூலிகன் குறியீடுகள் கடந்த வருடத்தில் உருவாக்கப்பட்டு, பின் ஆகஸ்டு 2016 இல் மேம்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தற்சமயம் நாள் ஒன்றிற்கு 13,000 கருவிகளை பாதிக்கும் கூலிகன், ஆசியாவில் 57 சதவிகித கருவிகளையும் ஐரோப்பாவில் சுமார் 9 சதவிகித கருவிகளையும் பாதித்து இருக்கிறது.

கூலிகன் மால்வேர் மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஆப் ஒன்றை பயனர் பதிவிறக்கம் செய்யும் போதும், போலி இணைய முகவரி அல்லது குறுந்தகவல் உள்ளிட்டவற்றை கிளிக் செய்யும் போதும் கூலிகன் மால்வேர் ஒருவரது கருவியை பதம் பார்க்கத் துவங்குகிறது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் ‘கூலிகன்’ மற்றும் இதர மால்வேர் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தாமல் இருப்பதோடு, ஸ்மார்ட்போனினை அப்டேட் செய்து வைப்பதும் அவசியம் ஆகும்.