ஸ்மார்ட்போனினை ஹேக் ப்ரூஃப் செய்வது எப்படி?

0
255

ஸ்மார்ட்போன் ஹேக்கிங் சார்ந்த குற்றச்சாட்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மலிவு விலை, மற்றும் விலை உயர்ந்த போன் என எதுவானாலும் ஹேக்கர்களுக்கு எல்லாமே ஒன்று தான். கூகுள் பிக்சல் போன் சீனாவி்ல் வெறும் 60 நொடிகளில் ஹேக் செய்யப்பட்டது.

எவ்வித பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர் சரிவர பாதுகாக்கவில்லை எனில் அதனை எளிதாக ஹேக் செய்து விட முடியும். ஹேக் செய்வது என்பது உங்களின் அனைத்து முக்கியமான தகவல்களும் திருடப்பட்டு விடும்.

இவ்வாறு நடைபெறாமல் இருக்க உங்களின் ஸ்மர்ட்போன்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என பாருங்கள்.

கடினமான பாஸ்வேர்டு:

பாஸ்வேர்டு செட் செய்வது உங்கள் விருப்பம் தான். ஆனால் இது தான் உங்களது ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைக்க உதவும் முதல் அடி ஆகும். இதனால் ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்படாமல் இருக்க அதில் கடினமான பாஸ்வேர்டு செட் செய்வது அவசியம் ஆகும். இத்துடன் பாஸ்வேர்டினை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.

என்க்ரிப்ட் செய்யப்பட வேண்டும்:

சமீபத்தில் வெளியான அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் ஏற்கனவே என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். ஐபோன் பயன்படுத்துபவர் எனில் ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கும் அதிகமான இயங்குதளம் பயன்படுத்துபவர் என்றால் உங்களின் ஐபோன் ஏற்கனவே என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

மென்பொருள் அப்டேட்:

உங்களின் ஸ்மார்ட்போன் புதிய அப்டேட் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களின் ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. மென்பொருள் அப்டேட் செய்தாலே உங்களது ஸ்மார்ட்போனினை ஹேக் செய்வது கடினமாகி விடும்.

டிவைஸ் ஃபைன்டர்:

சில சமயங்களில் உங்களின் ஸ்மார்ட்போனினை லொகேட் செய்ய, அதில் டிவைஸ் ஃபைன்டர் செட்டப் செய்திருப்பது அவசியம் ஆகும். இதனால் உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலும் கண்டறிவது எளிமையாகி விடும். மேலும் உங்களின் ஸ்மார்ட்போன் சைலண்ட் மோடில் இருந்தாலும் அதில் இருந்து ரிங்டோன் ஒலிக்கும் சத்தத்தை உங்களால் கேட்க முடியும்.