வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி செய்வது எப்படி?

0
340

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 2
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பாத்திரத்தில் சப்பாத்தி மற்றும் எண்ணெய் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • இதேபோன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.
  • இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி ரெடி.