விரைவில் புதிய ரூ.10 நோட்டு!

0
226

விரைவில் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுக்கள் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்றும், புதிய நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், பழைய ரூ.10 நோட்டுக்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர்.பட்டேலின் கையெழுத்துடனும், 2017 ஆண்டு கொண்டதாக இந்த புதிய நோட்டுக்கள் அச்சிடப்பட உள்ளன.