விஜய் சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ்?

0
239

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கவண்’.

இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்துள்ளளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தை மார்ச் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.