விஜய்யுடன் மோதும் தீபிகா படுகோன்!

0
224

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். தற்போது விஜய்யுடன் மோதலுக்கு தயாராகி வருகிறார். பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா திரைக்கு வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். தனியாக பொங்கல் தினத்தில் திரைக்கு வரலாம் என எண்ணியிருந்த பட குழுவினருக்கு போட்டியாக பல படங்கள் பொங்கல் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த பட்டியிலில் குறிப்பிடும்படியான ஹாலிவுட் படமும் இடம்பெறுகிறது. நடிகை தீபிகா படுகோன் முதன்முறையாக நடிக்கும் ஹாலிவுட் படம் ‘டிரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆப் ஸென்டர் கேஜ்’. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படம் விஜய் நடிக்கும் பைரவா படத்துக்கு போட்டியாக பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழியிலும் இப்படம் வெளிவரவுள்ளது. ஹாலிவுட்டில் வெளியாவதற்கு முன்பே இந்தியாவில் இப்படம் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.