ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி?

0
219

தேவையான பொருட்கள் :

சிவப்பு ராஜ்மா – ஒரு கப்
பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2

செய்முறை :

  • ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.
  • அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.