மலையாள படத்தில் நடிக்கும் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்!

0
238

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அனைவருடைய வரவேற்பையும் பெற்ற படம் ‘காக்கா முட்டை’. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் அந்த படத்தில் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்.

இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா’ படத்தில் விக்னேஷ் நடித்தார். ரமேஷ் தற்போது தயாராகி வரும் ‘டெய்லி பேப்பர்’ என்ற படத்தில் பேப்பர் போடும் சிறுவனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அடுத்து கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் விக்னேஷ், ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்போது இவர்கள் மலையாளப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்கள். ‘காக்கா முட்டை’ பாணியில் வித்தியாசமான கதையில் உருவாகி வரும் இந்த படத்திலும் இரண்டு பேரும் அண்ணன்-தம்பியாகவே நடிக்கிறார்கள்.